நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் படையெடுத்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘முழு நாடும் அழிவில்: நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிராக இந்த பேராட்டம் நடத்தப்பட்டது.
கொழும்பில் நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகைதந்த பெருந்திரளான மக்கள் அரசாங்கத்தின் மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கென நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 10 வெவ்வேறு பேரணிகளாக கொழும்பிற்கு வருகைதந்த மக்கள், எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் பி.டி.சிறிசேன மைதானம் ஆகிய இரு இடங்களில் ஒன்றுகூடி, பின்னர் அங்கிருந்து காலிமுகத்திடலை நோக்கிச்சென்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஒன்றுதிரண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]