தற்போதைய நிர்வாகத்தின் தன்னிச்சையான ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பிரஜைகளின் பங்கேற்பு டன் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு இந்தப் பேரணி ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பின ரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கும் பேரணிக்காக ஐக்கிய மக்கள் சக்தி அனைத்துக் கட்சிகளையும் அமைப்புகளையும் கொழும்புக்கு அழைத் துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதாகவும், நிலவும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அரச தலைவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் இனியும் துன்பப்பட வேண்டியதில்லை எனவும், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல் வதற்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி யையும் அரசாங்கத்தையும் நாட்டை முன்னேற்று வதற்கான பாதையில் தள்ளுவதற்கு எதிர்க் கட்சிகள் மக்களுடன் இணைந்து முன்வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் ஆட்சியால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமைகள் தொடர்பில் ஜனாதி பதியை சந்திப்பதற்கு கட்சி எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]