இந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதன்படி முதல் இன்னிங்ஸ் நிறைவில் இந்தியா 143 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையை தடுமாற்றம் அடையச் செய்தார்.
பெங்களூரில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 252 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை சற்று நேரத்துக்கு முன்னர் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இன்றைய ஆட்டத்தை 13 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நிரோஷன் திக்வெல்ல 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸில் தற்போது துடுப்பெடுத்தாடிவருகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]