லீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது கோத்தபாய ராஜபக்ச லீகுவான் யூ எனவும் மகிந்த ராஜபக்ச மஹாதீர் முகமட் எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டிருந்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வார இறுதிபத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லீ குவான் யூ இறந்துவிட்டார்,மஹாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச மக்கள் எதிர்பார்த்தபடி லீ குவான் யூவினதும் மஹாதீர் முகமட்டினதும் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காததே தற்போதைய பிரச்சினைகளிற்கும் பின்னடைவுகளிற்கும் காரணம் என தெரிவித்துள்ளார்.
நான் தேர்தலின் போது இதனை தெரிவித்தவேளை இதனை சாத்தியமாக்குவதற்காக அரசாங்கத்திற்குள் கடுமையாக பாடுபட்டேன் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச அந்த போராட்டம் காரணமாகவே நான் அரசாங்கத்திலிருந்து விலக்கப்பட்டேன்- தற்போது வெளியிலிருந்து போராட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]