ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் உக்ரேனில் இருந்து இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரேன் நாட்டையே சீர்குலையச் செய்துள்ளது.
அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் உக்ரேனை விட்டு இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பிய நாடுகள் மிக விரைவான வெளியேற்றம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரேனில் இருந்து சுமார் 40 இலட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]