உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் மற்றும் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கியை தொடர்ந்து தற்போது மற்றொரு ஜெனரல் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவின் கிழக்கு மாவட்டத்தின் 29 ஆவது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவ படையின் தளபதியான மேஜர் ஜெனரல் அண்ட்ரி கோல்ஸ்னிகோவ் உக்ரேனுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ளார் என உக்ரேன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 17 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரேன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.
உக்ரேனில் ரஷ்யா சுமார் 20 மேஜர் ஜெனரல்களை படை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி உக்ரேன் மீதான படையெடுப்பு ஆரம்பமாகியதில் இருந்து ரஷ்யாவின் மூன்று இராணுவ உயர் அதிகாரிகள் தற்போது உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் 41 ஆவது இராணுவ படையின் முதல் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் கொல்லப்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர் அண்ட்ரி கோல்ஸ்னிகோ உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]