நாட்டில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொல்பிதிகம
குருநாகல்- பொல்பிதிகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்டெங்வெள ஹிரிபிடிய பிரதான வீதியின் கொருவாவ பிரதேசத்தில் ஹிரிபிடிய நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த பாதசாரி மற்றும் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு குறித்த பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 51 வயதுடைய பொல்பிதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனமே விபத்து காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நெலுங்குளம்
வவுனியா – நெலுங்குளம் பொலிஸ் பிரிவில் நெலுங்குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார்சைக்களுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 64 வயதுடைய வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். மோட்டார்சைக்கிள் செலுத்திய இருவரின் கவனயீனமே விபத்து காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் நெலுங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குருவிட்ட
இரத்தினபுரி-குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு- இரத்தினபுரி பிரதான வீதியின் புசெல்ல பிரதேசத்தில் இரத்தினபுரி நோக்கி பயணித்துகொண்டிருந்த லொறியொன்று பாதசாரி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது பலத்த காயமடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடைய பமண பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். லொறி சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் எனவும் குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]