“ஈழத்தில் மருத்துவ துறையின் மையமாக திகழ்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் உறவுக் குடும்பமான கணேசன் சுகுமார் அவர்கள் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கி உதவியமை உலகத் தமிழர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கின்றது.”
திருவாளர் கணேசன் சுகுமார் அவர்கள், அண்மையில் காலமாகிய தனது பாரியார் சீலா சுகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக இப் பேருதவியினை வழங்கியுள்ளமை அன்பிற்கும் மகத்துவமான மனிதாபிமானத்திற்கும் எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.
ஏற்கனவே புலம்பெயர் தேசத்தில் தன்னுடைய பல்வேறு விதமான மனிதாபிமான உதவிகள் வழியாக தமிழர்களின் மனங்களில் அபிமானம் பெற்ற கணேசன் சுகுமார் அவர்களும் அவரது குடும்பத்தினரும் தேசம்மீதும் சமூகம் மீதும் பெரும் பற்றுக் கொண்டவர்கள்.
தற்போது யாழ் போதனா வைத்திய சாலைக்கு ஆற்றியுள்ள இப் பெரு உதவி வழியாக போரில் காயம் பட்ட எம் ஈழத் தமிழ் உறவுகளின் காயங்கள் துடைக்கப்பட்டு உயிர்காக்க பயன்படும் என்பது பெரும் மகத்தான கொடையாக உயர்ந்து நிற்கிறது.
உயிர் காக்கும் மருத்துவத் துறைக்கு ஆற்றிய இவ் உன்னத உதவியின் வாயிலாக சீலா சுகுமார் அவர்களின் ஆத்மா பெரும் நித்திய நிம்மதியை கொள்வதுடன் அவரின் புகழும் கனவும் ஈழ மண்ணில் நிலைத்தும் உயிர்ந்தும் விளங்குகிறது.
தன் இணையரின் பெருங்கனவை நிறைவேற்றிய திருவாளர் கணேசன் சுகுமார் அவர்களுக்கு ஈஸி24நியூஸ் ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் சார்பில் வாழ்த்தி வணங்கி நிற்கிறது.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]