இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘குதிரை வால்’.
இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘காலா’ பட புகழ் நடிகை அஞ்சலி பாட்டில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ஆனந்த் சாமி, சௌமியா ஜெகன், மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார்.
பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
ஃபேண்டசி மற்றும் சர்ரியலிச பாணியில் இதன் திரைக்கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு இணையவாசிகளிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது, இதில் நாயகன் ஓர் இரவில் உறங்கி, காலையில் எழுந்திருக்கும் பொழுது அவரது பின்பகுதியில் குதிரையின் வால் ஒன்று தோன்றுகிறது.
இதனால் ஏற்படும் அதிரடி திருப்பங்கள் தான் படத்தின் மையப் புள்ளி என்பதால் முன்னோட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]