அரசாங்கத்தினால் உண்மையை ஜீரணித்துக்கொள்ள முடியாததன் காரணமாகவே நான் பதவி விலகப்பட்டேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் உண்மையைசகித்துக்கொள்ள முடியவில்லை – அவர்கள் எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் நான் தெரிவித்தது சரியென்பதை வெளிப்படுத்தின என அவர் தெரிவித்துள்ளார்.
எனது மனச்சாட்சி தெளிவானது நான் தெரிவித்தது எது குறித்தும் நான் கவலைப்படவில்லை,நான் உண்மையை பேசினேன் அரசாங்கத்தினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை இதன் காரணமாகவே உண்iயை பேசுபவர்களை அகற்ற அவர்கள் தீர்மானித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்தும் விளங்கும் நிலையில் தொடர்ந்தும் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அரசாங்கத்திலோ கட்சியிலோ எனது பதவியை பாதுகாப்பதற்காக நான் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
நான் அவ்வாறான முயற்சிகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை, அந்த நிலைப்பாட்டை தொடருவேன்,நான் உண்மையை பேசினேன், கட்சிக்குள் எனது நிலையை பாதுகாப்பதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]