Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் 2.5 பில்லியன் டொலர்களை நாடு இழந்துள்ளது – அநுரகுமார

March 5, 2022
in News, Sri Lanka News
0
ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது!!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தினையும் , அதனால் ஏற்படக்கூடிய அபாயத்தினையும் அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான தேசிய பொருளாதார முகாமைத்துவ தீர்வு திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வலியுறுத்தியுள்ளது.

நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் தவறான தீர்மானங்களால் கடந்த 8 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடாகக் கிடைக்கப் பெறும் சுமார் 2.5 பில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது.

எரிவாயு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்காக ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கோரப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் வியாழக்கிழமை 3 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 இன் முதல் 5 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான அந்நிய செலாவணி இருப்பு வளர்ச்சி போக்கினையே காண்பித்தது.

அதற்கமைய 2020 ஜனவரியில் 581 மில்லியன் டொலரிலிருந்து 2021 இல் 775 ஆக அதிகரித்தது.

இதே போன்று பெப்ரவரியில் 527 மில்லியன் டொலரிலிருந்து 580 மில்லியன் டொலராகவும் , மார்ச்சில் 492 மில்லியன் டொலரிலிருந்து 612 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 375 மில்லியன் டொலரிலிருந்து 519 மில்லியன் டொலராகவும் , மே மாதத்தில் 432 மில்லியன் டொலரிலிருந்து 460 டொலராகவும் அதிகரித்தது.

அதற்கமைய 2020 ஆம் ஆண்டை விட 2021 இல் முதல் 5 மாதங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான வருமானம் 439 டொலர்களால் அதிகரித்திருந்தது.

இவ்வாறு அந்நிய செலாவணி வருமானம் 16 சதவீதமாக வீழ்ச்சியடைந்த போதே நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம். எனினும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித அவதானமும் செலுத்தவில்லை.

இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் ஊடான டொலர் வருமானம் 35 வீதமாகவும் , செப்டெம்பரில் 49 வீதமாகவும் , ஒக்டோபரில் 50 சதவீதமாகவும் , டிசம்பரில் 60 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போன்று இவ்வாண்டு ஜனவரியில் 62 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை 2055 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் 2494 மில்லியன் டொலர் அல்லது 2.5 பில்லின் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

ஆனால் எரிபொருள் இறக்குமதிக்கு மாதமொன்று 400 மில்லியன் டொலர் மாத்திரமே தேவைப்படுகிறது.

ஏனைய அனைத்து நாடுகளிலும் கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் அந்நிய செலாவணி வருமானம் அதிகரித்துள்ள நிலையில் , இலங்கையில் மாத்திரம் வீழ்ச்சியடைக் காரணம் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனரின் அறிவற்ற தீர்மானங்களே ஆகும்.

இவ்வாறான பாரிய டொலர் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு கிராம் உரத்தைக் கூட பெற்றுக் கொள்ளாமல் சீன நிறுவனத்திற்கு 9 மில்லியன் டொலரை வழங்கியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சஷீந்தி ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

தற்போது மியன்மாரிலிருந்து 30 மில்லியன் டொலர்களை மேலதிகமாக செலுத்தி 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

இவ்வாறான நிதி நெருக்கடிகள் நிலவுகின்ற காணப்படுகின்ற போதிலும் நிதி அமைச்சர் எங்கிருக்கிறார் என்றும் தெரியாமலுள்ளது.

வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது தமது குடும்ப பொருளாதாரம் அல்ல , நாட்டின் பொருளாதாரம் என்பதை ராஜபக்ஷாக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் திட்டமிடல் யாதெனில் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் டொலரையும் , எரிவாயு நிலக்கரி இறக்குமதிக்காக ரஷ்யாவிடம் 300 மில்லியன்  டொலரையும், அரிசி இறக்குமதிக்காக பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலரையும் , சீமெந்து மற்றும் இரும்பு இறக்குமதிக்காக பாக்கிஸ்தானிடம் 200 மில்லியன் டொலரையும் , சீனி, வெங்காயம் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரையும் , ஆடை உள்ளிட்ட ஏனைய பொருட்களை இறக்குமதி செய்தவற்காக சீனாவிடமிருந்து 1000 மில்லியன் டொலரையும் கடனாகப் பெற்றுக் கொள்வதாகும்.

பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக தேசிய பொருளாதார முகாமைத்துவ திட்டத்தை அரசாங்கம் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்றார்.

Previous Post

நாட்டை நிர்வகிக்க கோத்தாவுக்குத் தெரியாது | உதயகம்மன்பில

Next Post

மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேர மின்வெட்டு | மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கை

Next Post
மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேர மின்வெட்டு | மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கை

மழை பெய்யாவிட்டால் தினமும் 16 மணி நேர மின்வெட்டு | மின்சார சபை பொறியிலாளர்கள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures