அடுத்த வாரத்தில் இருந்து மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விசாரணைகள் மற்றும் பொது விசாரணைகள் தொடர்பான சாட்சியங்கள் கோரும் நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன்போதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறியதுடன், நாட்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகும் வரை இந்த நிலைமை தொடரும் என்றும் கூறினார்.
எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இன்றும் நாளையும் ஏழரை மணிநேரம் மேல் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமை கவலையளிக்கின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக. அடுத்த சில நாட்களில் எரிபொருள் கையிருப்பு கிடைத்தால், மின் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காண முடியும்.
ஜனாதிபதியுடனான நேற்றைய கலந்துரையாடலில் தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும், செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கும் டொலர்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]