இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் லக்னோ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 62 ஓட்டங்களால் இந்தியா இலகுவாக வெற்றிபெற்றது.
இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் குவித்த அதிரடி அரைச் சதங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தன.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, ஆரம்பம் முதல் கடைசிவரை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷானும் 71 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்;து இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் இஷான் கிஷானும் ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தனர்.
இஷான் கிஷான் 56 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் குவித்தனர்.
இவர்கள் இருவரும் 2 ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ரவீந்த்ர ஜடேஜாவுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இதில் ஜடேஜாவின் பங்களிப்பு வெறும் 3 ஓட்டங்களாகும்.
பந்துவீச்சில் லஹிரு குமார, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மிகவும் கடினமான 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
புவ்ணேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டமிழந்ததுடன் இலங்கையின் துடுப்பாட்டம் சரிவு காணத்தொடங்கியது.
தொடர்ந்து கமில் மிஷார (13), ஜனித் லியனகே (11), தினேஷ் சந்திமால் (10), தசுன் ஷானக்க (3) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். (60 – 5 விக்.)
எனினும் சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர ஆகிய மூவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
சரித் அசலன்க 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்ததுடன் 6ஆவது விக்கெட்டில் சாமிக்க கருணாரட்னவுடன் 37 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 7அவது விக்கெட்டில் துஷ்மன்த சமீரவுடன் 40 ஒட்டங்களையும் பகிர்ந்தார்.
சாமிக்க கருணாரட்ன 21 ஓட்டங்களையும் துஷ்மன்த சமீர ஆட்டமிழக்காமல் 24 ஒட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வெங்கடேஷ் ஐயர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: இஷான் கிஷான்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]