மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதியின்றி 5 வயது மதிக்கத்தக்க மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியபோது, நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைவாகவே நேற்று மாலை 6.45 மணியளவில் பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு பொலிசாருடன் வனவிலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு மறைத்து வைத்திருந்த மான் ஒன்று மீட்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]