Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவார் | ஆத்தூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

February 17, 2022
in News, இந்தியா
0
உதயநிதி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

ஒட்டு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் இன்று காலை தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கட்சியினர் மத்தியில் பேசியதாவது:-

உங்களுடைய எழுச்சியை பார்க்கும்போது நீங்கள் தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சேலத்துக்கு நாங்கள் எப்போது வந்தாலும் இதே எழுச்சி தான். இதே வரவேற்பு தான். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வரும்போதும், இதே அளவுக்கு எழுச்சியோடு வரவேற்பு கொடுத்தீங்க. தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் வெற்றிப் பெற வைப்போம் என தெரிவித்தீர்கள்.

11 சட்டமன்ற தொகுதிகளில் எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நியாமா?. இந்த தவறை மீண்டும் செய்வீர்களா?.

ஒட்டு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

உங்களுக்கு தெரியும் தி.மு.க. ஆட்சி அமைந்து 9 மாதங்கள் ஆகிறது. அப்போது கொரோனா 2-வது பேரலை. மிகப் பெரிய ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தான் தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஆஸ்பத்திரியில் பெட் கிடையாது. பெட் இருந்தால் ஆக்ஸிசன் இல்லை, மருந்து இல்லை, ஊசி இல்லை. தடுப்பூசி விழிப்புணர்வு சுத்தமா இல்லை.

அதற்கு முன்பு, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா முதல் அலையில் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட தடுப்பூசி 1 கோடி. ஊசியை வீணடித்தார்கள். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இல்லை.

ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தி.மு.க. தலைவர் சீரிய முயற்சியால் 9 மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி தடுப்பூசி போட்டு இருக்கிறோம். அந்த 10 கோடி தடுப்பூசி போட்டதால்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாலும் ஒரு மாதத்திற்கு முன்பு 3-வது அலையை கட்டுப்படுத்த முடிந்தது.

தி.மு.க. ஆட்சி அமைந்து முதல் 3 மாதம் கொரோனாவோடு போராடுவதில் போய்விட்டது. மேலும் 3-வது அலையையும் நாம் எளிதாக கடந்து இருக்கிறோம்.

சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என செய்து காட்டியவர் தலைவர் கலைஞர். அவருடைய வழியில் வந்த நம்முடைய தலைவரும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கஜானாவை முழுவதுமாக காலி பண்ணீட்டாங்க. 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு போயிருக்காங்க. இருந்தாலும் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கின்றார்.

கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம், அதேபோல் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3-ம் குறைத்து இருக்கிறார். பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்ற உறுதி மொழியும் தலைவர் கொடுத்து இருக்கிறார். கண்டிப்பாக தலைவர் சொன்னதை செய்வார்.

எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் பணத்தை பெற்றுக்கொண்டு, வீடுகளே இல்லாத பகுதிகளுக்கு தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அவரும், எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஜெயிலுக்குள் போய் கம்பி எண்ணுகிற அந்த சூழ்நிலை வரும்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக பிரசாரத்தில் சட்டமன்றத்தில் முடக்க போவதாக சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த மாதிரி, நாங்கள் கூவத்தூர் போய், சசிகலாவின் காலில் விழுந்து ஆட்சியை நாங்கள் பிடிக்கவில்லை. நாங்கள் மக்களிடத்தில் தான் வாக்குறுதி கொடுத்து மக்களை சந்தித்து, மக்களுடைய ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறோம்.

என்னை எடப்பாடி பழனிசாமி ஒரு வாரமாக தேடிக் கொண்டிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு இப்போது காணாமல் போய் விட்டார் என பிரசாரம் செய்து வருகிறார். நான் ஒரு வாரமாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். இந்த பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறேன். இது உங்களுக்கு தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையே.

தி.மு.க.வின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி தி.மு.க.வினர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்க வேண்டும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

Next Post

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டிவனியாவை விடுதலை செய்ய கோரி மகஜர்

Next Post
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டிவனியாவை விடுதலை செய்ய கோரி மகஜர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டிவனியாவை விடுதலை செய்ய கோரி மகஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures