Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

வரிகள் புரியவில்லை என்றால் என்ன? மருத்துவமனையில் மூதாட்டிக்கு மருந்தாக மாறிய விஜய் பாட்டு!

February 16, 2022
in Cinema, News
0
வரிகள் புரியவில்லை என்றால் என்ன? மருத்துவமனையில் மூதாட்டிக்கு மருந்தாக மாறிய விஜய் பாட்டு!
விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.30 மில்லியன் பார்வைகள், 2.5 மில்லியன் லைக்குகள் என ஏகப்பட்ட சாதனைகளை படைத்து மெர்சல் காட்டி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூதாட்டி ஒருவர் அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான அந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். தளபதி விஜய்யின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானால் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்காமல் இருக்குமா? 30 மில்லியன் வியூஸ் மற்றும் 2.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஏகப்பட்ட சாதனைகளை படைத்து வருகிறது அரபிக் குத்து. உலகம் முழுவதிலுமிருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சன் பிக்சர்ஸ் போட்ட ட்வீட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர். அதன் மாஷ் அப் ஒன்றையும் நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களை பாராட்டி இருந்தது, குழந்தைகள் முதல் பெரியவர்க்ள் வரை அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில், வயதான மூதாட்டி ஒருவர் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பாடலை பார்த்த விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் அதனை ஷேர் செய்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விஜய்யின் செல்ஃபி புள்ள உள்ளிட்ட பாடல்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவியதாக செய்திகள் வெளியான நிலையில், அரபிக் குத்து அதுபோன்ற ஒரு விஷயத்தை செய்துள்ளது. விஜய் இருக்க வரிகள் தேவையா? May be an image of 2 people, phone and text that says 'Jolly Jolly' அரபிக் குத்து பாடலின் சில வரிகள் அரபி மொழியில் உள்ளதால் அர்த்தமே புரியவில்லை என ட்ரோல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன் பாடல் வரிகள் புரியவில்லை என்றால் என்ன திரையில் தோன்றி ஆடுவது விஜய் அது ஒன்று போதாதா? 6 முதல் 60 வரை அனைவரையும் கவர்ந்தவர் அவர் என குறிப்பிட்டுள்ளதையும் ரசிகர்கள் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

விழி உறக்கம் நீங்கா விடியற் பொழுது | கேசுதன்

Next Post

பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

Next Post
பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures