தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய்யின் நடிக்கும் யானை படத்தின் போதைய விட்டு வாலே பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதற்குமுன் இந்த ஜோடி மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் யானை படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கிராமத்துக் கதையை மையமாக வைத்து ஆக்சன் படமாக யானை உருவாகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்த பாடலான “போதைய விட்டு வாலே” என்ற பாடல் இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]