ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான துலான் சமீர சம்பத் என்றழைக்கப்படும் ‘அப்பா’ (abba) மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை, எகொட உயன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போதே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் “பாணந்துறை சலிந்து” என்பவரின் நெருங்கிய சகா ஆவார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]