ஜப்பான் நாட்டின் 38 வயதான இளவரசி யாகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் அரச குடும்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் நபர் இளவரசி யாகோ என்பது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]