Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான 8 பேருக்கு பிணை

February 8, 2022
in News, Sri Lanka News
0
கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேருக்கு வவுனியா நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

03 பெண்களும் மற்றும் 05 ஆண்களுமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 8 பேருக்கும் ஆதரவாக மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம்  (CHRD) சட்ட உதவியை வழங்கியிருந்தது.

இந்நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபையினால் குறித்த விடயம்  விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7(1) பிரிவின் பிரகாரம் சட்ட மா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந் நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கருத்துச்சித்திரம்

Next Post

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Next Post
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures