2022 அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய டேனியல் மெட்வெடேவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
மெல்போர்னின் ‘Rod Laver Arena’ அரங்கத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இப் போட்டியில் 25 வயதான ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவ் 7-6(5), 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்ய நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடலை எதிர்கொள்வார்.
டேனியல் மெட்வெடேவ் எதிர்கொள்ளும் நான்காவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டி இது என்பதும் குறிப்பிடத்கத்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]