2019 ஆம் ஆண்டில் கொவிட்-19 வைரஸ் முதன்முதலில் கண்டுபிடித்த சீனாவின் வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் ‘நியோகோவ்’ குறித்து எச்சரித்துள்ளனர்.
இது அதிக மரணம் மற்றும் பரவல் விகிதத்தைக் கொண்டுள்ளது என ரஷ்ய செய்தியின் அறிக்கை தெரிவிக்கிறது.
புதிய பிறழ்வான நியோகோவ் வைரஸ் புதியதல்ல. இது 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ்-கோ வைரஸுடன் தொடர்புடையது. மனிதர்களுக்கு கொரோனா வைரஸை ஏற்படுத்தும் SARS-CoV-2 ஐப் போன்றது.
நியோகோவ் தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு வௌவால் கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விலங்குகளிடையே மட்டுமே பரவுவதாக அறியப்படுகிறது.
எனினும் நியோகோவ் வைரஸ் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்புடைய PDF-2180-CoV ஆகியவை மனிதர்களைப் பாதிக்கலாம் என்பதை புதிய ஆய்வு கண்டறிந்துள்ளதாக BioRxiv இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி, நியோகோவ் வைரஸ் மெர்ஸ்-கோ வைரஸுடன் உயர்ந்த இறப்பு வீதத்தை கொண்டுள்ளது. பாதிக்கப்படும் 3 நபர்களில் ஒருவர் உயிரிழப்பர் என தெரிவிக்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]