அங்குரார்ப்பண மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி வாகை சூட முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு வட மாகாண அணி களம் இறங்கவுள்ளது.
வட மாகாண அணியின் தலைவராக தேசிய வீரரும் அப்கன்ட்றி லயன்ஸ் அணித் தலைவருமான மரியதாஸ் நிதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த அணியில் முழுக்க முழுக்க வட மாகாணத்தைச் செர்ந்த வீரர்களே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் வட மாகாணத்தில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பஞ்சம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அணியில் இடம்பெறும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் பல்வெறு கழகங்களுக்காக விளையாடிய அனுபவசாலிகள்.
மன்னார் மாவட்டத்தச் சேர்ந்தவரும் 23 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் உதவிப் பயிற்றுநருமான ரட்ணம் ஜஸ்மின் வடக்கு மாகாண அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண அணியில் இடம்பெறும் வீரர்கள் :
- மரியதாஸ் நிதர்ஷன் (தலைவர்)
- எஸ். ஜெயராஜ்
- வி. கஜநாதன்
- ஜே. ஜெரின்சன்
- ஆர். சாந்தன்
- வீ. கீதன்
- செபமாலைநாயகம் ஜூட் சுபன்
- எஸ். ரூபன்ராஜ்
- ஏ. டிலக்சன்
- ஜே. அமல்ராஜ்
- ஜோய் நிதர்சன்
- ஏ. அனாகிளிட்டஸ்
- ரி. கிளின்டன்
- எஸ். ஜேசுதாசன்
- பி. சச்சின் லெம்பர்ட்
- எவ். அனோஜன்
- எம். சதுஷன்
- பி. சாருஜன்
- ரி. ஆர்த்திகன்
- ஏ. கிறிஸ்துராஜ்
- பி. புவிதரன்
21 வயதுக்குட்பட்ட வீரர்கள்:
- கே. தேனுஷன்
- எஸ். அஜய் ரீகன்
- என். தயான்ஷன்
- ஜே. ஜெபநேசன் ரோச்
- வி. விக்னேஷ்
- எம். பிரசாந்த்
19 வயதுக்குட்பட்ட வீரர்கள்:
- ஏ. செபஸ்தி அருள்
- ஏ. ஜே. ஜெரோம்
- ஜே. மெல்சான்
வட மாகாண அணியின் போட்டிகள்
- ஜனவரி 26 எதிர் சப்ரகமுவ (குருநாகால்)
- ஜனவரி 30 எதிர் ஊவா (துரையப்பா)
- பெப்ரவரி 2 எதிர் தெற்கு (வெபர்)
- பெப்ரவரி 6 எதிர் மத்திய (பதுளை)
- பெப்ரவரி 10 எதிர் கிழக்கு (நாவலப்பிட்டி)
- பெப்ரவரி 14 எதிர் ரஜரட்ட (மாத்தறை)
- பெப்ரவரி 18 எதிர் மேற்கு (சீவலி)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]