பாகிஸ்தானிய நீதித்துறை வரலாற்றில் முக்கிய திருப்பமாக பெண்ணொருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி 55 வயதுடைய ஆயிஷா மாலிக் திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
ஆயிஷா மாலிக் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் 16 ஆண் சக ஊழியர்களுடன் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான பல தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அரிய வெற்றி இது என்று வழக்கறிஞர்களும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]