இஸ்லாமாபாத்தில் செவ்வாயன்று பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொல்லப்பட்டதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கான பொறுப்பினை பாகிஸ்தான் தலிபான்கள் ஏற்றுள்ளனர்.
நகரின் சந்தை பகுதிற்கு அருகே உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நடந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்திய இருவரையும் கொன்றதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
மேலும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலலஸ் அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்ததாக பொலிசார் அறிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று குறித்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]