ஈழத்தில் பிறந்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பெரும் புகழைப் பெற்ற நடிகர் ஜெய் ஆகாஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Zee Tamil தொலைக்காட்சியின் 2021 சிறந்த சின்னத்திரை நடிகருக்கான போட்டியில் அதிக புள்ளிகளை மக்களிடமிருந்து பெற்று இச் சாதனையை அடைந்துள்ளார்.
தற்போது சின்னத் திரையில் முக்கிய தொடரில் நடித்து வரும் ஜெய் ஆகாஷ் அமைச்சர் என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்தும் வருகிறார்.