வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட புதிய கழகங்களுக்கான பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் சிஹான். H.M.சிசிரகுமார , செயலாளர் சிஹான்.B.M.கீர்த்திகுமார மற்றும் பிரதிநிதிகள் சென்செய்.நதித்த சொய்சா, சென்செய். ஜகத், சென்செய்.ரவூவ் ஆகியோர் அதீதிகளாக பங்கேற்றனர்.
மேலும் வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக சிஹான்.றேமன் கபிரியேல், செயலாளராக சென்செய்.தே.பிரபாகரன், பொருளாளராக சென்செய்.மோகன் வின்சென்ட் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக சிஹான்.என்.இரத்தினஜோதி அவர்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]