Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ஓடிடியில் வெளியாகும் சினம்கொள் ஈழத் திரைப்படம்

January 10, 2022
in Cinema, News
0
ஓடிடியில் வெளியாகும் சினம்கொள் ஈழத் திரைப்படம்

சினம்கொள் ஈழத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அறிவித்துள்ளார். எதிர்வரும் பொங்கல் தினத்தன்றே இத் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

2009இற்குப் பின்னர் தடுப்புச் சிறையில் இருந்து வெளியாகும் முன்னாள் போராளி ஒருவரின் நிகழ்கால வாழ்க்கை தொடர்பான இத் திரைப்படம் ஈழத்தின் இன்றைய நிலையையும் முன்னாள் போராளிகள் குறித்தும் பேசுகின்றது.

இது தொடர்பில் சினம்கொள் பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளதாவது:

”சினம்கொள் திரைப்படத்தின் வெற்றிகரமான பயணத்தில் கோவிட் பெரும் தடையாக மாறி எமக்கு மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் இழப்பை எற்படுத்தியது.

எம் மக்களின் கதையை அந்த மண்ணிலேயே உருவாக்கி எமக்கான சினிமாவை வெற்றியடைய வைக்க நாம் போராடிய போராட்டத்தில் வெற்றியை முழுமையாக அடைய முடியாமல் போனாது தூரதிஷட்டமானது.

ஆனாலும் நாங்கள் சோர்ந்து போகமால், எம்மாவர்களால் எமது ஈழசினிமாவுக்காய் ஒரு OTT தளத்தை உருவாக்கியுள்ள ஈழக்காண்பியில்(eelamplay.com). சினம்கொள் மற்றும் பல படங்களை வருகின்ற தை பொங்கல் முதல் வெளியிடுப்படுகின்றது.

சினம்கொள் வெளியீட்டின் போது ஆதரவு தந்த அனைவரும் ஈழசினிமாவுக்கான இத்தளாத்திற்கும் ஆதரவு அளித்து வெற்றியடைய வைக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைத்துறையினரின் பாராட்டை பெற்ற இத் திரைப்படம், புலம்பெயர் நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அரவிந்த் நர்வினி டெரி நடித்துள்ள இத் திரைப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, தீபச்செல்வன் பாடல்களையும் வசனத்தையும் எழுத்தியுள்ளார். ஒளிப்பதிவு பணியை பழனிகுமார் மாணிக்கமும் படத்தொகுப்பை சிவலிங்கம் அருணாச்சலமும் மேற்கொண்டுள்ளனர்.

பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசியின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள ரஞ்சித் ஜோசப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கை மற்றும் தென்னிந்திய நடிகர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் காட்சியாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person and text


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாடசாலை மாணவர் தொடர்பில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்

Next Post

‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை | தங்கர்பச்சான் செவ்வி

Next Post
‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை | தங்கர்பச்சான் செவ்வி

‘அழகி’ மாதிரி இன்னொரு படம் சாத்தியமில்லை | தங்கர்பச்சான் செவ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures