Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

January 10, 2022
in News, Sri Lanka News
0
ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருட இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் போது சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை வரவேற்ற ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கமான உறவுகளை நினைவு கூர்ந்தார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்கும் வகையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன மக்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது நன்றியினை  தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக இலங்கைக்கு சைனோஃபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ நன்றியை தெரிவித்தார்.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை திறக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை உயிர் குமிழிக்குள் வைத்து அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி வாங் யீயிடம் கோரிக்கை விடுத்தார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் திறன் குறித்து கவனம் செலுத்த முடிந்தால் அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சலுகை வர்த்தகக் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள முடிந்தால், தொழில்துறையை சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் இது நிகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீன தூதர் QI Zhenhong, வர்த்தக துணை அமைச்சர் QIAN Keming, உதவி வெளியுறவு அமைச்சர் WU Jianghao, சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் துணை இயக்குனர் HZHANG Maoyu, வெளியுறவு அமைச்சர் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு | திரைவிமர்சனம்

Next Post

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய இரு சடலங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures