ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி என்ற புதிய நாவல் வெளியாகியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான பயங்கரவாதி நாவலை டிஸ்கவரி புக்பலஸின் பதிப்பாளர் வேடியப்பன் வெளியிட நடிகரும் இயக்குனருமான கவிதா பாரதி பெற்றுக் கொண்டார்.
நடுகல் நாவல் வாயிலாக பெரும் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வன் புதிய நாவலான பயங்கரவாதியை வெளியிடவுள்ளதாக கடந்த ஆண்டு விடுத்த அறிவிப்பும் வாசகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில் விரைவில் நாவல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கூறியுள்ள நாவல் ஆசிரியர் தீபச்செல்வன், இலங்கையில் இந்த நாவலை பெற்றுக்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]