Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோலாகலமாக நிறைவேறியது மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்

September 24, 2016
in News
0

கோலாகலமாக நிறைவேறியது மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்

625-0-560-350-160-300-053-800-1280-160-95-1 625-0-560-350-160-300-053-800-1280-160-95-2 625-0-560-350-160-300-053-800-1280-160-95-3 625-0-560-350-160-300-053-800-1280-160-95-4 625-0-560-350-160-300-053-800-1280-160-95-5 625-0-560-350-160-300-053-800-1280-160-95-6 625-0-560-350-160-300-053-800-1280-160-95-7 625-0-560-350-160-300-053-800-1280-160-95-8 625-0-560-350-160-300-053-800-1280-160-95-9 625-0-560-350-160-300-053-800-1280-160-95-10 625-0-560-350-160-300-053-800-1280-160-95-11 625-0-560-350-160-300-053-800-1280-160-95-12 625-0-560-350-160-300-053-800-1280-160-95-13 625-0-560-350-160-300-053-800-1280-160-95-14 625-0-560-350-160-300-053-800-1280-160-95-15 625-0-560-350-160-300-053-800-1280-160-95-16 625-0-560-350-160-300-053-800-1280-160-95-17
மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் 2016ம் ஆண்டின் கோடைகால துடுப்பாட்டப் போட்டிகள் நட்சத்திர வீரர்களின்(ALL-STAR GAME) போட்டிகளுடன் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (September 18th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நிறைவேறியது.

கடந்த நான்கு மாதங்களாக மிகைத்திறமையான 16 அணிகள் பலதரப்பட்ட சுற்றுப்போட்டிகள்(Knock-Out Games) மற்றும் லீக்(Super League Games) போட்டிகளில் தமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தியதுடன், பல புதிய அணிகளின் எழுற்சியையும் கண்ட வருடமாக இவ்வருடம் அமைந்தமை மேலுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் 27 நட்சத்திர வீரர்கள் 9 பேர் கொண்ட மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு 8 ஓவர்கள் கொண்ட தொடராக இப்போட்டிகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்மூன்று அணிகளும் எம்மோடு விளையாடி, எம்மை விட்டு இறைவனடி சென்ற வீரர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மாறன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியின் உரிமையாளராக சாம் செல்வம்(Sam Selvam) மும், நிஷான் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணியின் உரிமையாளராக கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy)யும், நகு மற்றும் நேசன் ஆகிய இருவரின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியின் உரிமையாளராக டியூட்டன் பெர்னாண்டோ(Duton Fernando)வும் செயல்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சமாகும்.

முதலாவதாக மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணிக்கும் நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அடுத்ததாக மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணிக்கும், N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks)அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மூன்றாவதாக நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணிக்கும் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற N&N நைத்வாக்ஸ் (N&N Nighthawks) அணியும், ஒரு போட்டியில் வெற்றிபெற்ற மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியும் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி 7.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியை சேர்ந்த ஆனந்தயரசன் கந்தசாமி(Ananthayarasan Kandasamy) 2 ஓவர்கள் பந்து வீசி 06 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணி 7.4 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 73 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக All-Star Challenge Trophyஐ தாமதாக்கிக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியை சேர்ந்த மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியை சேர்ந்த ராஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) சிறந்த முறையில் பந்து வீசி 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் சிறந்த சகலதுறை வீரராக(MVP)வும் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியை சேர்ந்த மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) தெரிவுசெய்யப்பட்டார்.

அன்றைய தினம் ரசிகர்களையும், சகவீரர்களையும் உட்சாகப்படுத்தும் வகையில் மேலும் பல சிறப்புப்போட்டிகளும் இடம்பெற்றன. பலவீரர்கள் கலந்துகொண்ட அதிரடி துடுப்பாட்டவீரர்(Dangerous Batman) போட்டியில் இணுவில் பாய்ஸ் டொரோண்டோ அணியை சேர்ந்த திவாகர் தவராசா(Thivakar Thavarasa) அவர்கள் வெற்றிபெற்று வெற்றிக்கேடயத்துடன் பணப்பரிசிலையும் தனதாக்கிக்கொண்டார்.

அடுத்ததாக இடம்பெற்ற நேர்த்தியான பந்துவீச்சாளர்(Deadly Bowler) போட்டியில் சீராஸ் அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) அவர்கள் வெற்றிபெற்று வெற்றிக்கேடயத்துடன் பணப்பரிசிலையும் தனதாக்கிக்கொண்டார்.

MTCL All Star 2016

MTCL அமைப்பின் நட்சத்திர வீரர்களின்(ALL-STAR GAME) போட்டியைப் பார்த்துமகிழ Lankasri CEO சுரேஷ் சிறி(Suresh Sri), Nava Law Corporation உரிமையாளர் குபேஷ் நவா(Kubes Nava), LIFE100 FINANCIAL insurance adviser ஜெலன் ஆறுமுகநாதன்(Jelan Arumuganathan – Zenplus), JAAL AWARDS உரிமையாளர் ஜெய்(Jey) மற்றும் Mega Financial insurance adviser ஜெய் நடராஜா(Jay Nadarajah) ஆகியோர் வருகைதந்திருந்தமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஊடக அமைப்புக்களான நினைவுகள்(Ninaivukal), ஈகுருவி(ekuruvi), SBA Photography, மற்றும் Tamil Birds Studio ஆகியோரும் வருகைதந்து மிகஅருமையான விதத்தில் படங்களை எடுத்து தமது இணைய வலைத்தளங்களில் பதிவேற்றி உலகிலுள்ள அனைத்து ரசிகர்களும் பார்த்துமகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தனர்.

வருகைதந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவுகளை சமைத்துத்தந்த கல்வியங்காடு GPS CC அணியினருக்கு MTCL அமைப்பினர் தமது நன்றிகளை இத்தருணத்தில் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் இடம்பெற்ற அனைத்து போட்டிகளுக்கும் அனுசரணை வழங்கிய அனைத்து MTCL நலன்விரும்பிகளுக்கும், போட்டிகளை சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களும் மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பினர் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.

அடுத்த வருடம் மேலும் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய வருடமாக அமையப்போகின்றமை உறுதியாகும்.

இவ்வருடத்தின் பரிசளிப்பு(Awards Ceremony) விழா வருகின்ற கார்த்திகை(November) மாதம் 12ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குயின் பலஸ்(Queen Palace Banquet Hall)மண்டபத்தில் இடம்பெறும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Previous Post

அதர்வா நடிப்பில் மீண்டும் தனிஒருவன் கூட்டணி

Next Post

சாதனைகள் படைக்க உடல் குறைபாடு தடையில்லை: தங்கமகன் மாரியப்பன்

Next Post
சாதனைகள் படைக்க உடல் குறைபாடு தடையில்லை: தங்கமகன் மாரியப்பன்

சாதனைகள் படைக்க உடல் குறைபாடு தடையில்லை: தங்கமகன் மாரியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures