கால்நடைகளுக்கான தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாததன் காரணமாக சந்தையில் முட்டை மற்றும் கோழி என்பவற்றுக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான டொலர் தட்டுப்பாடு காரணமாக கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கால்நடைத் தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இதன் விளைவாக முட்டை மற்றும் கோழியின் விலைகள் குறையும் என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]