பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மெதிரிகிரிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் திவுல்கடவல மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவர் இன்று ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]