Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இனிமே நான் போலீஸ்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய் ஆகாஷ்

December 6, 2021
in Cinema, News
0
இனிமே நான் போலீஸ்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய் ஆகாஷ்

போலீஸ் உடையில் மிடுக்காக காட்சியளிக்கும் ஒரு புகைப்படத்தை ஜெய் ஆகாஷ் பகிர்ந்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் சீரியலில் சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கி பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீரியல் அபி டெய்லர். இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெய் ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில், புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக பதிவு செய்துள்ளார்.

அபி டெய்லர் சீரியலில் அசிஸ்டெண்ட் கமிஷனராக கைலாஷ் என்ற பாத்திரத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்க இருப்பதாக போலீஸ் உடையில் மிடுக்காக காட்சியளிக்கும் ஒரு புகைப்படத்தை ஜெய் ஆகாஷ் பகிர்ந்துள்ளார்.“அனைவருக்கும் மாலை வணக்கம். என்னுடைய புதிய ப்ராஜெக்டில் நான் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறேன். விரைவில் அதை பற்றிய முழு விவரங்களையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த போட்டோவிற்கு கேப்ஷனாக ஜெய் ஆகாஷ் பகிர்ந்துள்ளார். காவல் அதிகாரியாக ஸ்மார்ட்டாக காட்சியளிக்கும் ஜெய் ஆகாஷ் பகிர்ந்த புகைப்படம் இங்கே.

அபி டெய்லர் சீரியலின் தற்போதைய கதைப்படி, ஜெய் ஆகாஷ் போலீசாக ஒரு சில நாட்கள் முதல் சில வாரங்கள் மட்டுமே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவல்துறை அதிகாரியாக ஒரு கேமியோ ரோலில் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கதைக்களத்தில், டோனி மற்றும் அவருடைய மகன் மைக்கேல் இருவரும், கதையின் நாயகனான அசோக்கை கடத்தியுள்ளனர். அசோக்கை தேடிச்சென்ற அபிராமியும் அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். டோனியின் பிஸினசுக்கு மிகப்பெரிய எதிரி அசோக் மற்றும் அவரின் கார்மெண்ட்ஸ் வணிகம். ஏற்கனவே, டோனி அசோக்கின் பெற்றோர்களை அவர்களின் கார்மெண்ட்ஸ் வணிகத்தை மூடுமாறு எச்சரித்துள்ளார்.

அசோக்கின் தந்தை அதைக் கேட்பதற்கு தயாராக இல்லை. ஆனால் தன்னுடைய மகனின் உயிர் தான் முக்கியம் என்று பாரம்பரிய தங்கள் கார்மென்ட் பிஸினஸ் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார் அசோக்கின் தாயாரான நீலாம்பரி. இதற்காக அவர் போலீசாரின் உதவியையும் நாடி உள்ளார்.

டோனி மற்றும் மைக்கேலிடமிருந்து அசோக்கை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் ஜெய் ஆகாஷ் நடிக்க இருக்கிறார். இனிவரும் எபிசோடுகளில் அசோக் மற்றும் அபிராமியை கைலாஷ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த எபிசோடுகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபி டெய்லர் சீரியலில் அசோக் என்ற பாத்திரத்தில் நாயகனாக மதன் பாண்டியனும், அபிராமி என்ற பாத்திரத்தில் ரேஷ்மா முரளிதரனும், அசோக்கின் அம்மாவாக நீலாம்பரி என்ற பாத்திரத்தில் சோனா ஹேடன் மற்றும் அசோக்கின் அப்பாவாக சதீஷ் என்ற பாத்திரத்தில் சக்கரவர்த்தியும், வில்லன்களாக ராவன் மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில்தான் அபி டெய்லர் சீரியல் 100 எபிசோடுகளைக் கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

Next Post

மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

Next Post
பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை முடக்கியமை காரணமல்ல – திஸ்ஸ அத்தநாயக்க

மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures