கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு வீதம் ஒரு மண்டலம் செபம் செய்யக் கொடுமையான வறுமை பீடித்திருக்கும் இல்லத்திலும் பொன்மாரி பொழியும்.
பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த யந்திர வழிபாட்டினை தொடங்க வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் அன்று மாலையில் நீராடிவிட்டு புதுப்பட்டு உடுத்தி பூஜை அறையில் அமர்ந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு செப்புத் தகட்டில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள யந்திரத்தை வரைந்து அபிஷேகம் செய்து ஒரு பீடத்தின் மீது வைத்து, பொட்டிட்டு மலர்ச்சரம் அணிவித்து அதன் எதிரே நைவேத்தியப் பொருட்களான சுண்டல், சர்க்கரை, கற்கண்டு, தேன், இளநீர், பானகரம், பொரிகடலை, அவல் பாயாசம் ஆகியவைகளை வாழை இலையில் வைத்து அத்துடன் தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு வீதம் ஒரு மண்டலம் செபம் செய்யக் கொடுமையான வறுமை பீடித்திருக்கும் இல்லத்திலும் பொன்மாரி பொழியும்.
மூலமந்திரம்
‘ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண
பைரவாய தன தான்ய விரித்திகராய
சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!’
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]