கடந்த 20 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு அவரை வெட்டி கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சதேகநபர்கள் இருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் 29 வயதுடைய தெபொக்காவ கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், கொலை இடம்பெற்றபோது சந்தேகநபர் அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கரை படிந்த சட்டை மற்றும் சம்பவ தினத்தன்று பயணித்த பல்சர் ரக மோட்டார் சைக்களின் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றைய சந்தேகநபர் 33 வயதுடைய காவனிதிஸ்ஸபுற, அம்பிலிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட கட்டுத்துப்பாக்கி, போர் 12 ரக துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]