டென்னிஸ் வீராங்கனை மாயமானது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது.
சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் (வயது 35), சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி பற்றி சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை பெங் சூவாய் வெளியிட்ட நாள் முதல் அவர் மாயமானார்.
பொது வெளியில் அவர் தோன்றவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியாமல் இருந்தது. அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.
சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் காணாமல் போன பெங் சூவாய் தோன்றும் இரண்டு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பீஜிங்கில் நடைபெறும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியின்போது பெங் சூவாய் பங்கேற்றுள்ளார். பெங்க் சூவாய் வீடியோவில் சிரித்தபடி நிற்கிறார். அத்துடன் அவர் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அத்துடன் குழந்தைகளுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.
#No 1 TamilWebSite
| http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite
