பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக்கொண்டுள்ளது, ஆனால் நிதி அமைச்சர் இன்றும் சபையில் இல்லை, நேற்று முன்தினமும் சபைக்கு வரவில்லை. இது சபையை அவமதிக்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் இந்த கேள்வி சபையில் எழுந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் நிதி அமைச்சரின் வருகையின்மை குறித்து முறைப்பாட்டையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தின் போதும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் கேள்வி எழுப்பப்பட்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]