தடை செய்யப்பட்ட சட்ட விரோத கிருமி நாசினிகளை விநியோகத்திற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த, சந்தேகநபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் செட்டிக்குளம் முகாமினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கலென்பிந்துவௌ பொலிஸ் பிரிவில் கண்ணிமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் தடைசெய்யப்பட்ட சட்ட விரோத விவசாய கிருமி நாசினிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 29 வயதுடைய அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் – உப விவசாய திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட டைசோன் 6 கிலோ கிராம், 15 பக்கட் கிளைபோசெட், கொன்ஃபோ-60 300 மில்லிலீற்றர் போத்தல்கள் 22, கொன்ஃபோ-60 ஒரு லீற்றர் போத்தல்கள் 8, கிரான்ட் 30 பக்கட்டுக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று கொகாவௌ பொலிஸ் பிரிவில் யடலேவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போஃபிட் 500 ஈ.சி. ஒரு லீற்றல் போத்தல்கள் 67 மற்றும் கிரான்ட் 112 கிராம் பக்கட்டுக்கள் 397 என்பவற்றை விநியோகத்திற்காக தம்வசம் வைத்திருந்த 45 வயதுடைய கலென்பிந்துவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]