நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வரை அநுராதபுரத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில் நொச்சியாகம பிரதேசத்தில் 300.4 மில்லி மீற்றர் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதே போன்று மிஹிந்தலை பிரதேசத்தில் 216 மில்லி மீற்றர் , வேவந்தலாவ பிரதேசத்தில் 210.5 மி.மீ, யாழ்ப்பாணத்தில் 203 மி.மீ, தப்போவ பிரதேசத்தில் 200 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் குருணாகல் – வாரியப்பொல பிரதேசத்தில் 191 மி.மீ, கிரிஉல்ல பிரதேசத்தில் 119 மி.மீ, பொல்கஹாவெல பிரதேசத்தில் 151 மி.மீ, தம்பதெனிய பிரதேசத்தில் 121 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கேகாலை – ரம்புக்கனையில் 115 மி.மீ, கொடவெவையில் 185 மி.மீ, தீவெலையில் 161 மி.மீ, கேகாலையில் 141 மி.மீ, அலவ்வ 146 மி.மீ என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதே போன்று மொனராகலை நக்கல பிரதேசத்தில் 134 மி.மீ , களுத்துறை – மத்துகம பிரதேசத்தில் 103 மி.மீ என மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]