எங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதை வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதிப்பது சரியானதா? கூட்டமைப்பு தான் எமது நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்நிரனிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் காலகாலமாக விவசாயம் செய்துவந்த நிலத்தை வனஜீவராசிகள் திணைக்களம் மக்கள் செல்லமுடியாது என்று தடைவிதித்திருந்தது.
இது தொடர்பில் குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போதே பாதிக்கப்பட்ட மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தார்கள். குறித்த மக்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாம் காலகாலமாக விவசாயம் செய்து வருகின்றோம். அவ்வாறான சூழலில் எம்மை எமது பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்று வனஜீவராசிகள் திணைக்களம் தடைவிதிக்கின்றது. எமது வளங்கள் இதற்குள் காணப்படுகிறது.
இவற்றை பயன்படுத்தாத வகையில் தடை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் ? எமது மூதாதையர்கள் வாழ்ந்து விவசாயம் செய்துவந்த நிலத்தில் இத்தகைய அடாத்தான விடயத்தை இந்த திணைக்களம் செய்வது சரியா? கூட்டமைப்பு தான் எமக்கான நிதியை பெற்றுத்தர வேண்டும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள்தான் இதற்கு நல்லதீர்வை பொற்றுதரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]