நவம்பர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு எந்தவொரு நவம்பர் 1 முதல் எந்தவொரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தின் கீழ், இரண்டு வாரங்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை மீண்டும் தொடங்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]