நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி கடந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷேக் ராஜா, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]