தரவுகளுக்கு அமைய நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும்,நாட்டில் கீழ் மட்டத்தில் மிக வேகமாக கொவிட் வைரஸ் பரவிக்கொண்டுள்ளது.
நோய் அறிகுறிகளற்ற கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் சமூகத்தில் உள்ளனர் என சுட்டிக்காட்டும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுநோயாளர்களை அடையாளங்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளதை அடுத்து ஒரு சில தினங்களில் நாட்டின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என கொவிட் கட்டுப்பாட்டு செயலணி உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொது சுகாதார அதிகாரிகளின் நிலைப்பாடுகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]