தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]