சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் நோக்கில் இன்றைய தினம் (ஒக்டோபர் 18) டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி விளையாடுகிறது.
இலங்கை அணியின் நமீபியாவுக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் தொடங்குகிறது.
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்பாக இலங்கை ஓமானுக்கு எதிரான இரு டி-20 போட்டி மற்றும் இரு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை வென்றுள்ளது.
இரண்டாவது சுற்றுக்கு முன்னேற, இன்று தொடங்கும் தகுதிச் சுற்றில் இலங்கை குறைந்தது மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.
இலங்கையின் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, இந்த மூன்று போட்டிகளில் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறுவது மற்றும் எதிர்வரும் போட்டிகளுக்கு வெற்றிகரமான தொடக்கத்தைப் பெறுவது எல்லா வகையிலும் நன்மை பயப்பதாக அமையும்.
2014 உலக இருபதுக்கு-20 சாம்பியன்களாக இலங்கை உள்ளது. அந்த பட்டத்திற்கு மேலதிகமாக, டி-20 உலகக் கிண்ண அரங்கில் இரண்டு முறை (2009 மற்றும் 2012) ரன்னர்-அப் நிலையை அடைந்துள்ளது, டி-20 உலகக் கிண்ணத்தில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது (35 போட்டிகளில் 22 வெற்றி).
எனினும் அணியில் சில பின்னடைவுகள் காரணமாக இம்முறை தகுதி சுற்று என்ற நிலைக்கு சொன்றுள்ளது இலங்கை.
இன்று இலங்கையின் போட்டியாளர்களாக இருக்கும் நமீபியா குறைந்த திறன் கொண்ட சர்வதேச அணி அல்ல.
ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் தலைமையிலும், பியர் டி ப்ரூயின் பயிற்சியாளராகவும், நமீபியா கடந்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு சோதனையிலும் தேர்ச்சி பெற்று, டி-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளது.
இலங்கை அணியை கவலையடையச் செய்யும் ஒரே விடயம், முன் வரிசையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஓட்டங்களை அடையத் தவறியதுதான்.
ஒரு போட்டியில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்களைத் தவிர, இலங்கை பேட்ஸ்மேன்களால் இன்னும் திறமைகளைக் கொண்டு வர முடியவில்லை. உலகக் கிண்ணத்துக்கு முன்பு நடைபெற்ற பயிற்சிப் போட்டிகளிலும் இந்த நிலைமை காணப்பட்டது.
அதன்படி தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கும் நமீபியாவுக்கு எதிராக இன்று இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டும்.
பந்துவீச்சை பார்க்கும்போது, இலங்கை அணி சில ஸ்திரத்தன்மையை உருவாக்கியுள்ளது. வனிந்து ஹசரங்கா பந்துவீச்சுத் தலைவராகிறார். வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் வெற்றிகரமான தாளத்தை உருவாக்கும் திறன் இலங்கை அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]