ஒக்டோபர் 28 ஆம் திகதி தொடங்கும் பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணிக்கு பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
முதல் முறையாக இலங்கை ‘ஏ’ அணியின் தலைவராக 13 முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரும் விக்கெட் காப்பாளருமான சந்திர சமரவிக்ரமாவை தேர்வர்கள் நியமித்துள்ளனர்.
சந்திர சமரவிக்ரமாவைத் தவிர, ஓஷத பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனியா ஆகிய தற்போதைய டெஸ்ட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஷிரான் பெர்னாண்டோ மற்றும் தனஞ்சய லக்ஷன் ஆகியோர் 22 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஷிரான் பெர்னாண்டோ நுவான் பிரதீப்பின் காயம் காரணமாக உலகக் கிண்ணத்துக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனஞ்சய லக்ஷன் காயம் காரணமாக ‘ஏ’ அணியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி, ஷிரானுக்கு பதிலாக சாமிக கருணாரத்னவும், தனஞ்சய லக்ஷனுக்கு பதிலாக லஹிரு சமரகோனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் கடைசியாக விளையாடிய சில வீரர்கள் உள்ளடங்கலாக பெரும்பாலும் புதிய முகங்கள் இத் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிஷான் மதுஷ்க, லசித் க்ருஸ்புல்லே, நுவனிந்து பெர்னாண்டோ, நிபுன் தனஞ்சயா, செஹான் ஆராச்சிகே, லசித் அபேரத்ன, கலனா பெரேரா, ஹிமேஷ் ராமநாயக்க, சுமிந்த லக்ஷன், அஷேன் டேனியல், துவிந்து திலேகரத்ன, சாமிக குணசேகர மற்றும் லஹிரு சமரக்கோன் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
சுமிந்த லக்ஷன் ‘ஏ’ அணியில் புதிதாக உள்ளீர்க்கப்பட்டுள்ளபோதிலும், அவர் முன்னர் இலங்கை தேசிய அணிக்கு பெயரிடப்பட்ட கூடுதல் வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இம் மாதம் 28 ஆம் திகதி தொடங்கி இரண்டு அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளை உள்ளடக்கியது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]