Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் | தெரிந்த போட்டிகளில் தெரியாத பல விடயங்கள்

October 17, 2021
in News, Sports
0
டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் பயணம் ஆரம்பமானது!

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்தப்படும் 16 நாடுகள் கொண்ட இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (ஒக்டோபர் 17) அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் தொடக்க போட்டியில் ஓமன் பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஓமானின் அல் அமரத் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாமகும்.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் டுபாய் சர்வதேச மைதானத்தில் நவம்பர் 14 அன்று நடக்கும் இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 45 போட்டிகள் உள்ளடங்குகின்றன.

இலங்கை

நடப்பு டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் பயிற்சிப் போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ள இலங்கை நாளை (ஒக்டோபர் 18) நமீபியாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை தகுதிகாண் போடியில் ஆரம்பிக்கும்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி அயர்லாந்துக்கு எதிராகவும், ஒக்டோபர் 22 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிராகவும் உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் இலங்கை ‘ஏ’ பிரிவில் விளையாடும்.

தகுதி சுற்றிலிருந்து அடுத்த 12 சுற்றுகளுக்கு முன்னேற இலங்கை நாளை முதல் தொடங்கும் மூன்று தகுதிகாண் போட்டிகளிலிருந்து இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

நிலைகள்

போட்டிகள் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது – சுற்று 1, சூப்பர் 12 சுற்று மற்றும் நொக்அவுட்கள் (அரை இறுதி / இறுதி)

சுற்று 1 ; எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக போட்டியிடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 நிலைக்கு முன்னேறும்.

சூப்பர் 12 ; தலா ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நொக்-அவுட் நிலைக்கு முன்னேறும், நொக்-அவுட்டில் இரண்டு அரையிறுதி மற்றும் ஒரு இறுதிப் போட்டி இருக்கும்.

புள்ளி வழங்கும் முறை

ஒரு வெற்றியின் மூலம் அந்த அணி இரண்டு புள்ளிகளைப் பெறும். சமநிலை ஏற்பட்டால், முடிவு அல்லது கைவிடப்படாவிட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். தோல்வியைத் தழுவினால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

ரிசர்வ் டே

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி.) அரையிறுதி மற்றும் இறுதி இரண்டிற்கும் ‘ரிசர்வ் டே’களை வைத்துள்ளது. வேறு எந்த போட்டிகளுக்கும் அந்த நாள் ஒதுக்கப்படவில்லை.

குழுக்கள்

சுற்று 1 

குழு ஏ : இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா

குழு பி : பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினியா, ஓமான்

சூப்பர் 12 

குழு 1 : இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், குழு ஏ யில் முதலிடம் பெறும் அணி, குழு பி யில் இரண்டாம் இடம்பெறும் அணி.

குழு 2 : இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து, குழு ஏ யில் இரண்டாம் இடம்பெறும் அணி, குழு பி யில் முதலிடம் பெறும் அணி.

பரிசு பணம்

போட்டிக்கான பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்ட 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அணிகள் பகிர்ந்து கொள்ளும்.

வெற்றியாளர்கள் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள், இரண்டாம் இடத்திற்கு 800,000 அமெரிக்க டொலர்களை கிடைக்கும். தோல்வியடைந்த அரை இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் 400,000 அமெரிக்க டொலர்களை பெறுவார்கள்.

சூப்பர் 12 சுற்று அணிகள் ஒவ்வொன்றும் 70,000 அமெரிக்க டொலர்களை பெறும். அதே சமயம் குழுவில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணி 40,000 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும்.

சுற்று 1 முடிவில் நான்கு அணிகள் நொக் அவுட் ஆனதும் 40,000 அமெரிக்க டொலர்களை பெறும். முதல் சுற்றில் ஒரு அணி வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டியிலும் 40,000 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும்.

இடங்கள்

இந்தப் போட்டிகள் டுபாய் சர்வதேச மைதானம், அபுதாபி ஷேக் சயீத் மைதானம் மற்றும் ஓமன் கிரிக்கெட் அகாடமி ஆகிய மூன்று மைதானங்கிளல் நடைபெறும்.

ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றவர்கள்

  • இந்தியா (2007)
  • பாகிஸ்தான் (2009)
  • இங்கிலாந்து (2010)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2012)
  • இலங்கை (2014)
  • மேற்கிந்தியத்தீவுகள் (2016)

மேலதிக குறிப்புகள்

  • இலங்கை விளையாடிய இறுதிப் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக மூன்றாகும். அதிகமுறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணி.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் விளையாடிய அரையிறுதி எண்ணிக்கை நான்காகும்.
  • இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடிய சம்பியனான அணி மேற்கிந்தியத்தீவுகள் மட்டுமே ஆகும்.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் அதிகளவான சதங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல் ஆவார். அவர் 8 சதங்களை விளாசியுள்ளார். அதேநேரம் ஒரு தொடரில் இரண்டு முறை சதம் அடித்த ஒரே வீரரும் அவர் தான்.
  • ஒரு போட்டியில் அதிகளவான ஓட்டங்களை குவித்த வீரர் மெக்கலாம் ஆவார் (123). அவர் இந்த சாதனையை 2012 ஆம் ஆண்டில் பங்களாதேஷுக்கு எதிராக நிகழ்த்தினார்.
  • டி-20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜெயவர்த்தனாவை விட அதிக ஓட்டங்கள் யாரும் எடுக்கவில்லை. அவர் 2007 – 2014 ஆம் அண்டு வரை விளையாடிய 31 போட்டிகளில் 1016 ஓட்டங்களை குவித்துள்ளார்.
  • இந்தியாவின் விராட் கோலி, இலங்கையின் திலகரத்ன டில்ஷான் மற்றும் மஹேல ஜெயவர்த்தன – ஒரே தொடரில் 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் ஆவர்.
  • 2014 இல் கோஹ்லி 319 ஓட்டங்களையும், 2009 இல் டில்ஷான் 317 ஓட்டங்களையும், 2010 இல் ஜெயவர்த்தன 302 ஓட்டங்களையும் எடுத்தனர்.
  • அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய சகலதுறை வீரர் ஷாஹித் அப்ரிடி ஆவார். அவர் 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளதுடன், 546 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
  • முதல் தடவயைாக ஹெட்ரிக் எடுத்த வீரர் பிரட் லீ ஆவார். அவர் 2007 இல் தொடக்க பதிப்பில் பங்களாதேஷத்திற்கு எதிராக இந்த சாதனையை புரிந்தார்.
  • தொடரில் அதிகளவிலான ஓட்டங்களை குவித்த அணி இலங்கை ஆகும். 2007 இல் இவர்கள் கென்யாவுக்கு எதிராக 260/6 ஓட்டங்களை பெற்றனர்.
  • தொடரில் மிகவும் குறைந்த அளவிலான ஓட்டங்களை (39) பெற்றுக் கொண்ட அணி நெதர்லாந்து ஆகும். அவர்கள் 2014 இல் இலங்கைக்கு எதிராக இந்த நிலையை எட்டினர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு

Next Post

இலங்கை ‘ஏ’ அணிக்கு பல புதிய வீரர்கள்

Next Post
இலங்கை ‘ஏ’ அணிக்கு பல புதிய வீரர்கள்

இலங்கை 'ஏ' அணிக்கு பல புதிய வீரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures