மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார்.கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்கியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்றும் சசிகலா தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

#No 1 TamilWebSite
