சவூதி அரேபியாவில் எதிர்வரும் ஞாயிற்று கிழமை(17) முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இனிமேல் அங்கு பொது இடங்களில் சமூக இடைவெளி பேண வேண்டியதில்லை மற்றும் மாஸ்க் அணியத்தேவை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புனித ஸ்தலங்களுக்குள் மாத்திரம் அதன் பணியாளர்களும் ஏனையோரும் மாஸ்க் அணிதல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணக்கவழிபாடுகளில் இனிமேல் சமூக இடைவெளிகள் தேவையில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித மக்கா மற்றும் மதீனா பள்ளிவாசல்களின் முழுப்பரப்பிலும் முழுமையாக வணங்கி வழிபட அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]